Sunday 4 December 2011

சிறுபான்மையினரின் உரிமைகள் -பாகம் -2

Rasheed Lanka

தேசிய,இன,மத மொழிச் சிறுபான்மைக் குழுக்களில் உள்ளடங்கியவர்களின் உரிமை குறித்த பிரகடணம் (ஐநா பொதுச்சபை : தீர்மானம் 4-135 – 1992 டிசம்பர் 18 )
உறுப்புரை -3
அ. எவ்வித பாரபட்சமும் இன்றி சிறுபான்மைச் சாhந்தவர்கள் இந்தப் பிரகடணத்தில் குறிப்பிட்டு ள்ளவைகள் உள்ளிட்ட தங்களின் உரிமைகளைத் தனியாகவோ அல்லது தனது சமூகத்தில் உள்ள மற்ற உறுப்பினர்களோடு சேர்ந்தோ அமுலாக்கலாம்.
ஆ. இந்தப் பிரகடனத்தை அமுலாக்குவது அல்லது அமுலாக்காமல் இருப்பதன் தொடர்விளைவாய் சிறுபான்மையை சேர்ந்த எந்த ஒருவருக்கும் பாதகம் ஏற்படலாகாது.
இவ்வுறுப்புரையின் பிரதான அம்சங்கள் :
ஆட்கள் தனிhயகவும் கூட்டாகவும் தமது உரிமைகளை பணன்படுத்த முடியும்.சிறுபான்மையினர் தமது உரிமைகளைப் பயன்படுத்துகின்றார்கள் என்பதற்காகவோ அல்லது பயன்படுத்தாமல் இருக்கின்றார்கள் என்பதற்காகவோ அவர்கள் மீது பாரபட்சம் காட்டப்படலாகாது.
உறுப்புரை -3 (அ) விற்கு அமைய: சங்கங்கள் கலாச்சார அமைப்புக்கள் மற்றும் கல்வி நிலையங்கள் மூலமும் வேறு வழிகளிலும் உரிமைகள் கூட்டாகப் பயன்படுத்த முடியும் என்பதே இங்கு வலியுருத் தப்படும் விடயமாகும். சிறுபான்மையினர் தமது கலாச்சாரத்தை கைக்கொள்ளவும் தமது மதத்தைப் பின்பற்றவும் தமது மொழியைப் பேசவும் உரிமை கொண்டுள்ளனர். கூட்டான வெளிப்பாடு இல்லா விட்டால் இந்த உரிமைகள் யாவும் அர்த்தமற்றாகிப் போய்விடும்.சிறுபான்மையினர் தமது குழுவின் தனித்துவ அடையாளத்தை வெளிப்படுத்துவதால் தனியாகவோ அல்லது கூட்டாகவோஎவ்வித பாரபட்சங்களுக்கும் ஆளாக்கப்படுதலாகாது என்பதையும் அவர்களின் உரிமைகள் இப்பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவை மாத்திரமின்றி சகல மனித உரிமைகளையும் உள்ளடக்குகின்றது என்பதனையும் இவ்வுறுப்புரை தெளிவாக எடுத்துக் கூறுகின்றது.
உறுப்புரை -3 (ஆ) விற்கு அமைய: தமது உரிமைகளை பயன்படுத்துவதால் அல்லது பயன்படுத்தாமல் விடுவதால் சிறுபான்மையினர் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாக்கப்படக்கூடாது என்பதை இது வலியுறு த்துகின்றது. இதன் பிரகாரம் ஓர் அரசாங்கம் ஏதேனுமொரு குறிப்பிட்ட இன அடையாளத்தை ஒருவர் மீது திணிக்க முடியாது.அவ்வாறே சிறுபான்மைப்பிரிவொன்றைச் சேர்ந்தவர்கள் அப்பிரிவைச் சேர்ந்த ஒருவரை பலவந்தமாக தமது குழுவில் இனைத்துக் கொள்ள முடியாது.
உறுப்புரை -4
அ. எவ்வித பாரபட்சமுமின்றிச் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் சிறுபான்மைச் சேர்ந்தவர்கள் முழுமையாகவும் செயலூக்கத்தோடும் தங்களின் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரத்தை அமுலாக்குவதை உறுதிப்படுத்துவதற்குத் தேவைப்படும் இடங்களில் அரசுகள் நட வெடிக்கை மேற்கொள்ளும்.
ஆ. சிறுபான்மையினர் தங்களின் குணாதிசயங்களை வெளிப்படுத்தவும் தங்களின் கலாச்சார மொழி மத  பாரம்பரிய பழக்க வழக்கங்களை மேம்படுத்தவும் ஏற்ற சாதகமான சூழலை உருவாக்குவதற்காக தேசிய சட்டங்களை மீறுவதாகவோ அல்லது சர்வதேச தராதரத்திற்கு எதிராகவோ இந்தக் குறிப்பான நடவெடிக்கைகள் இருக்கின்ற நிலமைகள் தவிர மற்றய சமயங்களில் அரசுகள் நடவெடிக்கை மேற்கொள்ளும்.
இ. எங்கெல்லாம் சாத்தியப்படுமோ அங்கெல்லாம் தங்களின் தாய்மொழியை கற்றுக் கொள்வற்குப் போதுமான வாய்ப்பையும்ääதங்களின் தாய்மொழியிற் பயில்வதற்கான வாய்ப்பபையும் ஏற்படுத்தும் முகமாகப் பொருத்தமான நடவெடிக்கைகளை அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.
ஈ. தங்களின் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள சிறுபான்மையினரின் வரலாறு பாரம்பரியம் மொழி மற்றம் கலாச்சாரம தொடர்பான அறடவை உற்சாகப்படுத்துவதன் பொருட்டு கல்வித்துறையில் பொருத்தமான இடங்களில் அரசுகள் நடவெடிக்கை மேற்கொள்ள வேண்டும். சிறுபான்மையினரின் ஒட்டு மொத்த சமுதாயத்தைப் பற்றிய அறிவைப் பெறுவதற்கான பொருத்தமான வாய்ப்புகள் இருக்க வேண்டும்.
உ. சிறுபான்மையினர் தங்களின் நாட்டின் பொருளாதார வளாச்சி மற்றும் மேம்பாட்டில் முழுமையாக பங்கு பெறுதற்கேற்ற வகையிற் பொருத்தமான நடவெடிக்கைகளை அரசுகள் மேற் கொள்ள வேண்டும்.
இவ்வுறுப்புரையின் பிரதான அம்சங்களாக : சிறுபான்மைப்பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் தமது உரிமைகளை அனுபவிப்பதற்கு இடமளிக்கும் வகையில் திட்டமிட்ட உறுதியானääஇலக்கு சார்ந்த நடவெடிக்கைகள் அரசினால்; மேற்கொள்ளப்பட வேண்டும். சிறுபான்மையினர் தமது கலாச்சாரம்ää மொழிää மதம்,பாரம்பரியங்கள் மற்றும் பழக்க வழக்கங்களை மேலும் விருத்தி செய்ய உரிமை கொண்டு ள்ளனர்.தாய்மொழியை கற்பதற்கும்ääதாய்மொழியில் கல்வி பயில்வதற்கும் கொண்டுள்ள உரிமை வலியுறுத்தப்படுவதால்,சிறுபான்மையினரின் மொழித் தனித்துவ அடையாளம் ஊக்குவிக்கப்ப டுகிறது.சிறுபான்மையினரின் வரலாறு பாரம்பரியங்கள்ääகலாச்சாலம் முதலியவற்றை பெரும்பான்மையினர் கற்றறிவது உறுதிசெய்யப்படுகின்றது.கலாச்சாரங்களுக்கு இடையிலான மற்றும் பல்வகை கலாச்சாரக் கல்வி முறை ஊக்குவிக்கப்படுகின்றது.அபிவிருத்தியின் சகல துறைகளிலும் சிறுபான்மையினர் பங்குபற்றுவது வலியுறுத்தப்படுகின்றது.இந்த உரிமைகள் எவ்வளவு தூரத்திற்கு வழங்கப்படும் என்பது சிறுபான்மையினர் வாழும் சூழல் ,அரசாங்கத்திடமுள்ள மூலவளங்கள் என்பவற்றில் தங்கியுள்ளது.
உறுப்புரை - 4 (அ) விற்கு அமைய: பிரகடனத்தின் நோக்கத்தை அமைவதற்கு அரசாங்கங்கள் மேற் கொள்ள வேண்டிய நடவெடிக்கைகளை இவ்வுறுப்புரை கூறுகின்றது.இவ்வுறுப்புரையையும் உரிமைகள் எவையெனத் தீர்மானிக்கும் ஆ)பிரகடனத்தின் முக்கிமான பகுதியாகும். சிறுபான்மைப் பிரிவுகளை சேர்ந்த மக்கள் எளிதில் பாதிப்புகளுக்கு இலக்காகக்கூடியவர்கள்.அவர்கள் மீது பாரபட்சம் காட்டப்படலாம் என்பதால் ஏனைய மக்கள் அனுபவிக்கும் உரிமைகளை அவர்களும் சமத்துவ அடிப்படையில் அனுபவிப்பதை உறுதிப்படுத்த விசேட நடவெடிக்கைகள் அவசியம். ஆகவே அவர்களின் மனித உரிமைவிடயத்தில் அரசாங்கள் சிறப்பு அக்கரை காட்ட வேண்டும் என்பதை இவ்வுறுப்பரை வலியுருத்துகின்றது. நடவெடிக்கைகள் எவையெனக் குறிப்பிட்டுக் காட்டவிட்டாலும் சட்டரீதியிலான நடவெடிக்கைகளும் சட்டரீதியற்ற நடவெடிக்கைகளும் அடங்கும்.
உறுப்புரை -4 (ஆ) விற்கு அமைய: ஒருபுறத்தில்,சிறுபான்மைப்பிரிவுகளைச் சேர்ந்த தனிநபர்கள் தமது குழுவின் பாரம்பரிய தனித்துவ இயல்புகளை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும்,அத்துடன் மறுபுறத்தில்ää அவர்கள் தமது குழுவின் ஏனைய அங்கத்தவர்களுடன் கூட்டுச்சேர்ந்து தமது கலாச்சாரம்,மொழி,பாரம்பரியங்கள் ஆகியவற்றை விருத்தி செய்யக்கூடியதாக இருக்க வேண்டும் எனக்கூறுகின்றது. தேசிய சட்டங்களுக்கும் சர்வதேச தராதரங்களுக்கும் முரணான குறிப்பிட்ட நடைமுறைகள் தவிர்ந்த ஏனைய வழிகளில் என்பது ஒரு குழுவின் பாரம்பரிய நடைமுறைகளில் சர்வதேச மனித உரிமை தராதரங்களுக்கு முரணான செயல்கள் இடம்பெறுமாயின் அவற்றின் மீது தடைவிதிப்பதற்கு அவசியமான ஓர் ஏற்பாடு ஆகும். சுதேசிகள் மற்றும் பழங்குடி மக்கள் தொடர்பான 169ஆம் இலக்க சர்வதேச தொழில்தாபன உடன்படிக்கையின்  8.2 மற்றும் 9.1 உப உறுப்புரைகளும் கலாச்சார ஒத்திசைவு அம்சம் பற்றிக் குறிப்பிடுகின்றன. விலக்கப்பபட வேண்டிய குறிப்பிட்ட நடைமுறை கள் என்பன தேசிய சட்டங்கள்,சர்வதேச தராதரங்கள் ஆகிய இரண்டு;க்குமே முரணானவையாக இருக்க வேண்டும்.
உறுப்புரை -3 (இ) இந்த உறுப்புரை குழுத்தனித்துவ அடையாளத்தின் அதி முக்கிய அம்சங்களில் ஒன்றான மொழி உரிமை பற்றி எடுத்துக் கூறுகின்றது. சிறுபான்மைப் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் தமது தாய் மொழியை கற்க அல்லது தாய்மொழியில் கல்வியல்  நடவெடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அரசு இது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவெடிக்கையானது சிறுபான்மைப்பிரிவின் அளவு யாது ? அச்சிறுபான்மைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட பிரதேசத்தில் அடர்த்தியாக வசிக்கின்றார்களா அல்லது நாடெங்கும் பரந்து கானப்படுகின்றார்களா ? என்பன போன்ற விடயங்க ளில் தங்கியுள்ளது.சிறுபான்மையினரின் மொழி பிரதேசத்திற்கு உரிய மொழியாக  இருந்தால் அதாவது நாட்டின் பிரதேசமென்றில் அநேகமான மக்கள் பாரம்பரியமாக பயன்படுத்தி வரும் மொழியாக இருந்தால்,பாலர்பாடசாலைக் கல்வியும் ஆரம்பப்பாடசாலைக் கல்வியும் அம்மொழியில் வழங்கப்பட வேண்டும். சிறுபான்மையினரின் மொழி ஒரு பிரதேசத்திற்குரிய மொழியாக,நாட்டில் அநேகமான மக்களால் பயன்படுத்தப்படும் மொழியாக இருக்காவிட்டால் குறைந்த பட்சம் அந்த மொழியை கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளாவது அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். ஏனையோரைப்போலவே சிறுபான்மையினரும் தமது தாய்மொழியைப் பிரதான மொழியாகக்கொண்ட தனிப்பட்ட கல்வி நிலையங்களை அமைக்க உரிமை கொண்டுள்ளனர்.
உறுப்புரை - 4 (ஈ) விற்கு அமைய:  தேசிய சமுகத்தில் அங்கம் வகிக்கும் சகல கலாச்சார,மொழி மற்றும் மதக்குழுக்களும் ஒன்றுக்கொன்று காட்டும் மரியாரத,பாரபட்சமின்மை ஆகியவற்றின் அடிப்படையில் சமத்துவமான சகவாழ்வு முறையை உறுதிப்படுத்துவதே இதன் கூட்டுமொத்தமான நோக்கமாகும்.சகல விதமாக இனப்பாரபட்சங்களையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கையின் 29ஆவது உறுப்புரை என்பனவும் இது பற்றி எடுத்துக்கூறுகின்றது.
பல நாடுகளில் குறிப்பாக,பிணக்கு நிலவும் சூழ்நிலையில்ääசிறுபான்மைப் பிரிவினரின் கலாச்சாரம்,வரலாறு,பாரம்பரியங்கள் என்பன திரிபுபடுத்தப்படலாம்.இதனால் அத்தகைய குழுக்கள் மத்தியில் தம்மைப்பற்றிய தாழ்வுமனப்பான்மையும் பரந்த சமூகத்தில் எதிர்மறையான போக்குகளும் தோன்றும் இதனைத்தவிர்க்க,சிறுபான்மையினருக்கு அவர்களின் கலாச்சாரம் பற்றிப் போதிக்கப்பட வேண்டும்.அதேசமயத்தில் சிறுபான்மையினரின் கலாச்சாரங்கள் முழுச்சமூகத்திற்குமே வளமூட்டுமென்பதை பெரும்பான்மையினர் உணாந்து கொள்ளக்கூடிய விதத்தில் அவர்களுக்குச் சிறுபான்மையினரின் கலாச்சாரங்கள் புகட்டப்பட வேண்டும்.சகல குழுக்களுக்கும் இடையிலான பரஸ்பர நல்லெண்ணம்,சகிப்பத்தன்மை என்பன பற்றிய போதனை எல்லா நாடுகளின் பாடவிதானங்களிலும் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும்.
உறுப்புரை - 4 (உ) விற்கு அமைய:சிறுபான்மைக்குழுக்கள் தத்தமது தனித்துவ அடையாளத்தை பேணிக்காக்குமு; அதேவேளையில் சகல சிறுபான்மையினரும் தேசி சுமூகத்தின் பொருளாதார அபிவிருத்தியில் பங்கு கொள்வதை இந்த உப உறுப்புரை வலியுறுத்துகின்றது.பூரண பங்கு பற்றுதல் என்பது 2ம் உறுப்புரையில் தெரிவிக்கப்பட்டுள்ள பயன்முனைப்பான பங்குபற்றுதலைக்குறிக்கின்றது.

பாகம் மூன்று  தொடரும்….

Wednesday 30 November 2011

Daily Life in Indian Kashmir

Daily Life in Indian Kashmir  -Rasheed Lanka 
















Monday 28 November 2011

சிறுபான்மையினரின் உரிமைகள் -பாகம் -1

Abdur Rasheethu

இலங்கைச் சிறுபான்மையினரின் உரிமைகள் தொடர்பாக அறிவதற்கு முன்னர் சிறுபான்மையினர் தொடர்பான அடிப்டை விடயங்களை அறிதல் மிக முக்கியமாகும், உலக சனத் தொகைப் பரம்பலில் சமனற்று கானப்படுவது போன்ற அமைப்பே நாடுகளின் சனத்தொகை அமைப்பிலும் பல்வேறு பட்ட வித்தியாசங்கள் கானப்படுகின்றன.இவ்வித்தாசங்கள் அங்கு வாழும் மக்களின்  அளவு ரீதியானதும்,பண்பாட்டு ரீதியிலும்,வெவ்வேறு பௌதீக காரணிகளின் அடிப்படையிலும் அமையலாம். இவற்றில் ஏதாவது ஒரு அளவு கோலின் அடிப்படையில் மக்கள் வகைப்படுத்தப்பட்டு இருப்பதனையும் அவதானிக்க முடியும். அதன் அடிப்படையில் சிறுபான்மையினர்,பொரும்பான்மையினர் போன்ற சொற்றொடர்கள் அவ்வக்குழுமத்தினை  வகைப்படுத்தியிருப்பதை அவதானிக்க முடிகின்றது. இச் சிறுபான்மை,பெரும்பான்மை நிலமைகள் மதம்,மொழி,நிறம்,இனம்,அரசியல் மற்றும் கொள்கை அடிப்படையிலும் அமையலாம்.
ஒரு நாட்டில் குறித்த மொழியைப் பேசுவோரின் தொகை ஒப்பீட்டளவில் மற்றுமொரு மொழியைப் பேசுவோரின் என்னிக்கையில் ஒப்பீட்டளவில் குறைவாக கானப்பட்டால் அவர்கள் மொழிவாரியான சிறுபான்மையினர் எனப்படுவர்.
பல்லினத்தன்மையும்,பல் கலாச்சாரமும் கொண்ட ஒரு  நாட்டில் பொதுவாக ஒரு பெரும்பான்மைசிறுபான்மை என்ற பேதங்கள் நிலவுவதை சாதாரணமாக அவதானிக்கலாம். சிறுபான்மை என்ற வகைப்பாட்டிற்குள் ஒன்றுக்கு மேற்பட்ட மக்கள் குழுமங்கள் ஏதாவது ஒரு அடிப்படையில் அமையவும் முடியும். இத்தகைய நிலமைகள் காணப்படும் நாடுகளில் உரிமைப்போராட்டங்கள்,பிரிவினைவாதம்,சுயநிர்ணயத்திற்கான போராட்டங்கள் என்பன இடம் பெறுவதை தவிர்க்க முடியாது.ஒவ்வொரு சமூகமும்; தன்னைப் பாதுகாத்துக்ககொள்ள முற்படும் போது அசாதாரன நிலைமைகள் ஏற்படுவது இயற்கையாகும். அந்த அடிப்படையிலேயே இவைகள் நோக்கபடல் வேண்டும்
சிறுபான்மையினரின் விடயங்கள் தொடர்பாக சர்வதேச தாபனங்களின் ஏற்பாடுகள்
தேசிய அல்லது இன,மத,மொழிச் சிறுபான்மைப் பிரிவினருக்குரிய மக்கள் உரிமைகள் தொடர்பான பிரகடனம்:
இதன் முக்கிய அம்சங்கள்
      1992 ஆம் ஆண்டு ஐ நா பொதுச்சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதுääசிறுபான்மையினர் உரிமைகள் தொடர்பாக கவனம் செலுத்தும் முதலாவது சர்வதேச மனித உரிமைகள் சாசனம். உலகலாவிய ரீதியில் எல்லாச் சூழ் நிலைகளிலும் பிரயோகிப்பதற்கான  நோக்கத்தை கொண்டது.  இது சர்வதேச ரீதியிலான குறைந்த பட்ச தராதரம் மட்டுமே அத்துடன் அரசாங்கங்கள் இதனைவிட சிறப்பான முறையில் செயற்பட வேண்டும் என எதிர்பார்கப்படுகின்றது.சிறுபான்மையினரின் உரிமைகளையும் சட்டத்தின் அடிப்படையிலான ஜனநாயக கட்டுக் கோப்பிற்குள் முழுச் சமுதாயமும் அபிவிருத்தி பொறுவதையும் இது தொடர்புபடுத்துகின்றது. இப்பிரகடனம் பின்வரும் உரிமைகளை சிறுபான்மை மக்களுக்குவழங்குகின்றது. 


தேசிய,இன,மத மொழிச் சிறுபான்மைக் குழுக்களில் உள்ளடங்கியவர்களின் உரிமை குறித்த பிரகடணம் (ஐநா பொதுச்சபை : தீர்மானம் 4-135 – 1992 டிசம்பா 18 )
உறுப்புரை -1
அ.அரசுகள் தங்களின் எல்லைக்குற்பட்ட பகுதியில் உள்ள தேசிய இனääமத மற்றும மொழிச் சிறுபான்மையினரின் இருத்தலையும் தனித்தன்மையையும் பாதுகாக்கும்.இத்தகைய தனித்தன்மைகள் வளர்வதற்கான சூழலையும் உற்சாகப்படுத்தும்.
ஆ.இத்தகைய இலக்கை அடைவதற்கு பொருத்தமான சட்ட மற்றும் ஏனைய நடவெடிக்கைகளை மேற் கொள்ளும்.
சிறுபான்மை மக்களின் வாழ்க்கைக்கும் அவர்களின் தேசிய இன கலாச்சார மத மொழி தனித்துவத்திற்கும் பாதுகாப்பு அளிப்பது அரசாங்கங்களின் கடமை என வலியுருத்தும் இந்த ஏற்பாடு கூட்டுப்பாதுகாப்பினை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.சிறுபான்மையினரின் வாழ்கை என்பது அவர்களின் உடற்பாதுகாப்பு வாழும் பிரதேவசங்களில் தொடர்ந்து தங்கியிருக்கும் உரிமை அப்பிரதேசங்களில் தொடர்ந்து தங்கியிருப்பதற்கு தேவையான பொருட்கள் வளங்களைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு முதலிய அனைத்தையும் உள்ளக்குவதாக அமைகின்றது.
இவ்வுறுப்புரையின் பிரதான அம்சங்களாக கருதப்படுபவை
சிறுபான்மையினரின் தனித்துவ இயல்புகளைப் பாதுகாத்து ஊக்குவித்தல் சிறுபான்மை மக்களின் உரிமைகள் தொடர்பான அதிமுக்கமான கோட்பாடாகும்.
இன ஓழிப்பிலிருந்து பாதுகாப்புப் பெறும் உரிமை,உயிர் வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளை பெறும் உரிமை.
பாரபட்சம் காட்டப்படாமை,ஒதிக்கி வைக்கப்படாமை,ஆட்கொள்ளப்படாமை அத்துடன் பல்வகை கலாச்சாரத்தின் அபிவிருத்திக்கு ஊக்கமளித்தல்,இக்குறிக்கோள்களை எய்துவதற்கு அரசாங்கத்தினால் உரிய நடவெடிக்கைகள் எடுக்கப்படுதல் வேண்டும்.
இன ஒழிப்புக் குற்றத்தை தடுப்பதற்கும் தண்டிப்பதற்கான ஒப்பந்தம் குடியுரிமைகள் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் 27 ஆவது உறுப்புரை என்பனவும் உயிர்வாழவதற்கான உரிமை பற்றி எடுத்துக் கூறுகின்றன.
சிறுபான்மையினரின் வாழ்க்கை உரிமையை பாதுகாத்தல் என்பது அவர்களின் உடல்ரீதியிலான பாதுகாப்புடன் மட்டும் அமைந்து விடுவதில்லை.அது அவர்களின் குழுத்தனிததுவத்தை பேனுவதற்கு அவசியமான மத,கலாச்சார,மொழிப்பாரம் பரியங்களின் பாதுகாப்பையும் உள்ளடக்குகின்றது.அந்த தனித்துவம் பேணிப்பாதுகாக்கப்படும் சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டுமாயின் சிறுபான்மையினர் கலாச்சார அபிவிருத்திக்கு தடையாக இருக்கும் சட்டங்கள் அகற்றப்பட வேண்டும்.அவர்களின் கலாச்சார வளர்ச்சிக்கு தடையாகாத  அவசியமான நிறுவணங்கள் உற்பட எல்லா வசதிகளும் செய்து கொடுக்கப்படல் வேண்டும்.அரசின் சகல துறைகளிலும் சிறுபான்மையினரின் பங்களிப்பும் அவர்களின் தனித்துவ இயல்புகளுக்கும் மதிப்பளிக்கப்பட வேண்டும்.அத்தகைய சூழ்நிலையை மேலும் முன்னேற்றுவதற்கு அரசாங்கத்தினால் மூலவளங்கள் வழங்கப்படும் சாத்தியமும் நிலவ வேண்டும்.
சிறுபான்மையினரின் குழுத்தனித்துவத்தைப் பேணுவதற்கு அவசியமான நிலமைகளை அரசாங்கங்கள் பாதுகாத்து ஊக்குவிக்க வேன்டுமென உறுப்புரை 1 (ஆ)பகுதி வலியுறுத்துகின்றது.இவ்வுறுப்புரையை சரியான முறையில் அமுல்செய்வதற்கு சட்டங்களும் ஏனைய நடவெடிக்கைகளும் அவசியம்.ஏனைய நடவெடிக்கைகள் என்பதில் நீதிபரிபாலனää நிர்வாகää பிரச்சார மற்றும் அறிவூட்டல் நடவெடிக்கைகளும் அடங்கும்.பொருத்தமான நடவெடிக்கைகள் எவையென அடையாளம் காண சிறுபான்மையினருடன் ஆலோசனை நடாத்துவது முக்கிமானதாகும். இத்தகைய நடவெடிக்கைகளில் பெரும்பாலனவை பற்றிய விபரங்கள் பிரகடனத்தின் 2ஆம்ää4ஆம் போன்ற பல்வேறு உறுப்புரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. அனைத்துவிதமான இன ஒதுக்கல்களையும் ஒழிக்கும் சர்வதேச உடன்படிக்கை(4ஆம் உறுப்புரை ) குடியுரிமை மற்றம் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை (20 ஆம் உறுப்புரை),  போன்ற வேறு சர்வதேச மனித உரிமை ஒப்பந்தச்சாதனங்களிலிருந்தும் இத்தகைய நடவெடிக்கைககள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
உறுப்புரை – 2
அ.தேசிய,இன,மத மற்றும் மொழிச்சிறுபான்மையினர் சுதந்திரமாக எவ்வித குறுக்கீடும், ஒரு தலைப் பட்ச மான பார்வையும் இல்லாமல் தனிப்பட்ட மற்றும் பொதுவான வாழ்க்கையில் தங்களின் சொந்த கலாச்சாரத்தை அனுபவிப்பதற்கும்,தங்களின் மதத்தைப் போதிப்பதற்கும்,அதனைக் கடைப்பிடிப்பதற்கும் தங்களின் மொழியைப் பயன்படுத்துவதற்கும் உரிமை படைத்தவர்கள்.
ஆ.கலாச்சார,மத,சமூக ,பொருளாதார மற்றும் பொதுவாழ்க்கையில் செயலூக்கத்தோடு பங்குபற்று வதற்குச் சிறுபான்மையினர்கள் உரிமை படைத்தவர்கள்.
இ.தேசிய சட்டமியற்றல்லுக்கு முரண்பாடிலில்லாத வகையில் தாங்கள் சார்ந்துள்ள சிறுபான்மையினம் அல்லது தாங்கள் வசிக்கும் பிராந்தயம் தொடர்பான முடிவுகளிற் தேசிய அளவிலும் பொருத்தமான இடங்களில் பிராந்திய மட்டத்திலும் செலூக்கத்தோடு பங்கு பெறுவதற்குச் சிறுபான்மையினருக்கு உரிமை உண்டு.
ஈ.தங்களின் சொந்த அமைப்புக்களை நிறுவுவதற்கும்,தொடர்ந்து நடத்துவதற்கும் சிறுபான்மையினருக்கு உரிமையுண்டு.
உ.எவ்வித ஒருதலைபட்சமான அணுகுமுறையும் இனறிச்சுதந்திரமாகவும் அமைதியான முறையிலும் தங்கள் குழுக்களில் உள்ள உறுப்பினர்களோடும்,மற்றய சிறுபான்மை இனத்தவரோடும் ஒரு நாட்டின் எல்லைகளுக்கு அப்பால் மற்ற நாட்டில் வசிக்கும் தங்களின் இன அல்லது மரபுவழி அல்லது மத அல்லது மொழியோடு தொடர்புடைய குடிமக்களோடு தொடர்பு கொள்ளவும் சிறுபான்மையினருக்கு உரிமையுண்டு.
இவ்வுறுப்புரையின் பிரதான அம்சங்களாக :
பிரகடனத்திலுள்ள கோட்பாடுகள் மதிப்பளிக்கப்படுவதை உறுதிப்படுத்த அரசாங்களிகால் மேற்கொள்ள வேண்டிய நடவெடிக்கைகள் தொடர்பாகவும்,பலதரப்பட்ட துறைகளில் முனைப்பாக சிறுபான்மையினர் பங்கு கொள்ள உள்ள உரிமைகள் ,சங்கங்கள் அமைத்து ஒன்று ஒன்று கூடும் சுதந்திரம், சிறுபான் மைப்பிரிவுகளுக்கு உள்ளேயும்,சிறுபான்மைப்பிரிவுகளுக்கு இடையிலும் தேசிய எல்லைகளைத் தான்டியும் மேற்கொள்ளப்படும் தொடர்புகள் உட்பட தமது குழுவின் ஏனைய அங்கத்தவர்களுடன் அமைதியான வழியில் தொடர்புகளை ஏற்படுத்தவும் அவற்றைப் பேணவும் கொண்டுள்ள உரிமை யினையும் வெளிக்காட்டுகின்றது.
உறுப்புரை 2(அ)இனை நோக்கும்  போது குடியுரிமைகள்,அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் 27ஆவது உறுப்புரையும் கிட்டத்தட்ட இதே மாதிரியான வாசகத்தையே கொண்டுள்ளது.எனினும்,பிரகடமானது ஆக்கபூர்வமான நடவெடிக்கைகளைக் குறிப்பாக வலியுறுத்துதவனால் ஒரு படி மேலே சென்றுள்ளது எனலாம்.அதாவது,இந்த உரிமைகளைச் சரிவர அமுல்செய்வதற்குப் பாதுகாப்பு நடவெடிக்கைகளை எடுத்தல்,சிறுபான்மையினரின் தனித்துவம் பேணப்படும் சூழ்நிலையை உருவாக்குதல் முதலிய செயற்பாடுகள் அவசியமானவை என்பதைப் பிரகடனம் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.
உறுப்புரை 2(அ)இன் கலாசார,மத,சமூக,பொருளாதார நடவெடிக்கைகளிலும்,பொது வாழ்விலும் பங்குபற்றும் உரிமைகள் பற்றிய கோட்பாட்டை வெளிப்படுத்துகின்றது.வௌ;வேறு குழுக்களை சேர்ந்த மக்கள் தத்தமது கலாச்சாரம்,மொழி ஆகியவற்றின் அடிப்படையில் சமுதாயத்தின் கலாச்சார வாழ்வில் பங்கு கொள்ளவும்,கலைகள் மற்றும் விஞ்ஞானத்தை படைக்கவும் அனுபவிக்கவும்,தமது கலாச்சார சொத்துக்கள் மற்றும் பாரம்பரிங்களை பாதுகாக்கவும் தொடர்பாடலுக்காக தமது சொந்த ஊடகங்களை வைத்திருக்கவும் அரச மற்றும் பொது ஊடகங்களில் சமத்துவ வாய்ப்பினை பெற்றுக் கொள்ளவும் உரிமை கொண்டுள்ளனர்.இன,மத,கலாச்சார அடிப்படையில் சங்கங்கள்,கழகங்கள் மற்றுமின்றி அரசியல் கட்சிகளையும் ஏற்படுத்துவதற்கான உரிமையையும் பங்குபற்றுதல் என்ற கோட்பாட்டினுள் அடங்குகின்றது.பொதுவாழ்வில் முழுமையாகப் பங்குபற்றுதல் என்பதை நடைமுறைப்படுத்தும் போது சில சமயங்களில் விசேட ஏற்பாடுகள் அவசியமாகலாம். பயன் முனைப்பான பங்குபற்றுதலுக்கு வழிகோலக்கூடிய உள்ளுராட்சி,சமஷ்டி ஆட்சி மற்றும் சுயாட்சி முறைகளே அவையாகும்.
உறுப்புரை 2(இ)இன் படி பங்குபற்றுதலை உறுதிப்படுத்தப்பல வழிகள் உள்ளன.சிறுபான்மையினரின் சங்கங்களை பயன்படுத்துதல்ääஏனைய சங்கங்களில் அங்கத்துவம் பெறுதல்,நாட்டிற்குள்ளும் தேசிய எல்லைகளை தான்டியும் சுதந்திரமான முறையில் தொடர்புகளை ஏற்படுத்துதல் என்பன அவற்றுள் சிலவாகும்.
உறுப்புரை 2(ஈ)இன் படி
கல்வி நிலையங்களை ஏற்படுத்தி நெறிப்படுத்த தனிப்பட்டவரர்களும் அமைப்புக்களும் கொண்டுள்ள சுதந்திரத்தை வலியுறுத்தும் பொருளாதார,சமூக,கலாச்சார உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் 13.4 ஆவது உறுப்புரையும் மத அல்லது நம்பிக்கை சுதந்திரம் என்பதில் பொருத்தமான தர்ம ஸ்தாபனங்கள் அல்லது மனித நேய நிறுவனங்களை ஏற்படுத்திப் பராமரிக்கும் சுதந்திரமும் அடங்கும் என்பதனை வலியுருத்தும் மத விரோதம் தொடர்பான ஐக்கிய நாடுகள் பிரகடனத்தின் உறுப்புரையும் இந்த உப உறுப்புரையும் மேலும் விபரமாக விளக்குகின்றன.சிறுபான்மை மக்களின் சங்கங்களை ஏற்படுத்துவதற்கான உரிமை தேசிய மட்டத்தில் மட்டுமின்றிச் சர்வதேச மட்டத்திலும் செல்லுபடியாகும்.

உறுப்புரை 2(உ)இன் படி
இதில் பல பிரிவுகள் கானப்படுகின்றன சிறுபான்மைக்குழு அங்கத்தவர்களுக்கு இடையிலான தொடர்புகள் சிறுபான்மைக்குழுக்களுக்கு இடையிலான இடையிலான தொடர்புகள்,தேச எல்லை கடந்த  தொடர்புகள் என்பன அவற்றுள் அடங்கும்.சிறுபான்மைக் குழு அங்கத்தவர்களுக்கு இடையிலான என்பது சங்கம் அமைக்கும் உரிமையோடு பின்னிப்பினைந்துள்ளது. சிறுபான்மைக்குழுக்களுக்கு இடையிலான தொடர்பு என்பது ஒரு நாட்டின் எல்லைக்குள் பல்வேறு சிறுபான்மைக் குழுக்கள் தமது அனுபவங்கள்,தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும், சிறுபான்மை யினருக்கென ஒரு பொது அரங்கை ஏற்படுதிக்கொள்ளவும் உதவும் ஏற்பாடாகும்.தேச எல்லை கடந்த தொடர்பு என்பது வேறு நாடுகளிலுள்ள சிறுபான்மையினருடன் பிரஜைகளுடனும் சுதந்திரமாகவும் அமைதியான வழியிலும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நிபந்தனை அரசின் பாதுகாப்பு நலன்களுக்கு உத்தரவாதமாக அமைகின்றது.

சிறுபான்மையினர் முனைப்பாக அரசியலில் பங்குபற்றுதல் : சமுதாய அரசியல் அமைப்புக்களில் பயனுள்ள முறையில் பங்குபற்றும் வாய்ப்பு பெரும்பான்மை,சிறுபான்மை ஆகிய இரு பிரிவுகளையும் சேர்ந்த வௌ;வேறு குழுக்களின் அங்கத்தவர்களுக்கு வழங்கப்படுவது அவசியம். இருந்த போதிலும் சிறுபான்மையினர் சம்பந்தப்பட்ட சகல நிலமைகளுக்கும் ஏற்புடையதான ஒழுங்கு முறை கிடையாது. பொது விவகாரங்களில் எவ்வித பாரபட்சமும் இன்றிப் பங்குபற்றும் உரிமையும் வாய்ப்பும் சகல மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதே அடிப்படைத்தேவையாகும். இத் தேவையை நிறைவு செய்வதற்கு அரசாங்கங்களும் சிறுபான்மைக் குழுக்களும் பின்வரும் மாற்று வழிமுறைகளை ஆராய்ந்து தமது சூழ்நிலைக்கு ஏற்ப பொருத்தமான ஏற்பாட்டைச் செய்வதற்கான முயற்சிகளை மேற் கொள்ளலாம்.
1. சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் செய்யும் ஆலோசனை சபைகளும் தீர்மானம் எடுக்கும் அமைப்புகளும் கல்வி,கலாச்சாரம்,மதம் போன்ற துறைகளில் இது முக்கியமானது.
2. தேசிய அல்லது இன,மத,மொழிச்சிறுபான்மை மக்களின் தேர்ந்து எடுக்கப்பட்ட அமைப்புகளும் பேரவைகளும்
3. உள்ளுர் மற்றும் தன்னாட்சி நிர்வாகமும்  பிரதேச அடிப்படையிலான தன்னாட்சியும்,காலத்திற்குகாலம் நடத்தப்படும் சுதந்திரமாக  தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும்  ஆலோசனை,சட்டவாக்க,நிறைவேற்று அமைப்புக்களையும் இது உள்ளடக்கும்.
4. ஒரு சிறுபான்மைப்பிரிவினர் தமது தனிததுவத்தை பேணும் பொருட்டு,தமது மொழியை அல்லது  சமய சடங்குகளை விருத்தி செய்வது போன்ற ஒரு நோக்கத்திற்காக பிரதேச அடிப்படை அல்லாத சுய முறையில் மேற் கொள்ளும் சுய நிர்வாகம் (செயற்பாட்டு ரீதியிலான தன்னாட்சி,கலாச்சார தன்னாட்சி )
5. பண்முகப்படுத்தப்பட்ட அல்லது உள்ளுர் அடிப்படையிலான அரசாங்கம் அல்லது தன்னாட்சி ஏற்பாடு. இது பிரதேச மற்றும் ஜனநாயக அடிப்படையிலானது. காலத்திற்கு காலம் நடத்தப்படும் பாரபட்சமற்ற,சுதந்திரமான தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும். ஆலோசனை சட்டவாக்க,நிறைவேற்று அமைப்புகளையும் இது உள்ளடக்கும்.
6. தேசிய சட்டசபையிலும் ஏனைய தெரிவுசெய்யப்பட்ட அமைப்புகளிலும் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்கான விசேட நடவெடிக்கைகள். சிறுபான்மையினரின் என்னிக்கை மிகக்குறைவாக இருந்தாலும் சாதாரண நிலைமைகளில் பிhதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தல்.விகிதாசார தேர்தல் முறையில் சிறுபான்மையினருக்குகான குறைந்த பட்ச பிரதிநிதித்துவம் குறைக்கப்படலாம்.

-பாகம் இரண்டு தொடரும்.....................

Sunday 15 May 2011

தென் இந்தியருடானான இலங்கை முஸ்லிம்களின் உறவு


தென்னிந்தியாவுக்கும் இலங்கை முஸ்லிம்களுக்கும் இடையிலான உறவை பின்வரும் 3 தலைப்புக்களில் நோக்கலாம்.

1. இஸ்லாம் இலங்கையில் அறிமுகமான ஆரம்ப காலம்
2. பக்தாத் வீழ்ச்சியின் பின்
3. போர்த்துக்கேயரின் வருகைக்குப் பின்

1. இஸ்லாம் இலங்கையில் அறிமுகமான ஆரம்ப காலம்.
இந்தியாவின் தென் மேற்குக் கரையிலுள்ள கேரளா, இலங்கை போன்ற இடங்களுக்கும் அரபு நாட்டுக்குமிடையே நிலவிய வணிகத் தொடர்பு வரலாற்றுத் தொன்மை வாய்ந்ததாகும். இது குறித்து கலாநிதி சுக்ரி தனது இலங்கை முஸ்லிம்கள் எனும் நூலின் மூன்றாம் பக்கத்தில் குறிப்பிடுவது நோக்கத்தக்கது. இற்றைக்கு சுமார் 12 நூற்றாண்டுகள்க்கு முன் அரேபியர் காலி முதல் பேருவளை வரை குடியிருந்து வியாபாரம் செய்தார்கள், இந்நிலையில் தென்னிந்திய நகர்களான நாகூர், காரைக்கால், தொண்டி, காயல்பட்டணம் முதலாம் ஊர்களிலிருந்து முஸ்லிம் மனிதர்கள் வணிக நோக்கில் நம் நாட்டில் வந்து குடியேறினர். காலப்போக்கில் இலங்கையில் வாழ்ந்த அரபு சந்ததியினரையும் தென்னிந்தியாவிலிருந்து வருகை தந்தவர்களையும் கொண்டதான வித்தியாசம் காண முடியாத ஒரு கலப்புச் சமூகம் தோற்றம் பெற்றது.வணிகக் கப்பல்கள் தென்னிந்திய மேற்குக் கரையிலுள்ள துறைமுகங்களிளோ அல்லது இலங்கைக் கரையிலுள்ள துறைமுகங்களிலோ தரித்துச் செல்ல வேண்டிய நிலை காணப்பட்டது. இத்துறைமுகங்களில் வணிகப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடிந்தமை, பாதுகாப்பு, உணவு, நீர், கப்பலைப் பழுது பார்க்கும் வசதி என்பன காரணமாயின. கலீபஹ் அப்துல் மலிக்கின் காலத்தில் (கி.பி.7ம் நூற்றாண்டு) குடியேறிய ஹஷிமிகள் தென்னிந்தியாவிலுள்ள கொங்கன், கன்னியாகுமரி ஆகிய இடங்களிலும் இல்ங்கையில் மாந்தோட்டம், குதிரைமலை, புத்தளம், கொழும்பு, பேருவல, காலி முதலான இடங்களிலும் குடியேறினர். கி.பி.9ம் நூற்றாண்டில் மலபார், மஃபர் பிரதேசங்களிலிருந்து அரபிகள் இலங்கைக்கு வந்தனர். 9ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தென்னிந்திய கரையில் குடியேறிய முஸ்லிம்கள் பாண்டிய மன்னனிடம் செல்வாக்குப் பெற்று வழ்ந்தனர். இக்காலத்தில் இலங்கையுடனான கலாசாரத் தொடர்புகள் அதிகரித்தன. (அமீன்)

2. பக்தாத் வீழ்ச்சியின் பின்னர்
கி.பி. 12,13ம் நூற்றாண்டுகளில் தென்னிந்தியத் தமிழ் பேசும் முஸ்லிம்களுடன் நம் நாட்டு முஸ்லிம்களுக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. பக்தாத் வீழ்ச்சியைத் (கி.பி. 1258) தொடர்ந்து தோற்றம் பெற்ற மம்லூக்கிய ஆட்சி போன்றவற்றோடு தொடர்பு பின்னடைந்தது. முஸ்லிம்கள் இஸ்லாமிய உலகில் இருந்தும் துண்டிக்கப்படும் நிலை தோன்றியது. ஆயினும் வணிக ரீதியாக ஏற்பட்ட வளர்ச்சி அவர்களைத் தொடர்பு படுத்தியது. "மஃபர்" என்பது கொரமண்டல் கோஸ்ட் எனப்பட்ட சோழ மண்டலக் கரை. இதற்கு அரபுப் புவியியலாளர்கள் வைத்த பெயர்தான் மஃபர் என்பதாகும். கொல்லம் முதல் நெல்லூர் வரை உள்ள மூன்றரை மைல்கள் உள்ள கரையோரப் பிரதேசம் இவ்வாறு அழைக்கப்பட்டது. மலபார் முடிவதும் மஃபர் தொடங்குவதும் குமரிமுனையிலாகும். மஃபரில் முக்கிய குடியேற்றம் காயல்பட்டனமாகும். மலபாரின் வணிகப் பட்ட்னம் சிரங்கனூர்.இவர்கள் மாப்பிள்ளை எனும் மலையாள முஸ்லிம்களின் மூதாதையராவர்.

கி.பி.12ம் நூற்றாண்டில் முஸ்லிம் வணிகர்களின் முக்கிய துறைமுகமாக விள்ங்கியது காயல்பட்டினமாகும். காயல் வ்ணிகர்கள் இலங்கையோடு வர்த்தகத் தொடர்பு கொண்டனர். இவர்களது வணிக முயற்சிகள் புத்தளத்திலிருந்து பேருவளை வரையிலான எல்லாத் துறைகளில்ய்ம் இடம்பெற்றன. (இலங்கை முஸ்லிம்கள் - சுக்ரி)

கி.பி.13ம் நூற்றாண்டில் பேருவளை முஸ்லிம் ஒருவர் நுண்ணிய புடவை நெய்யும் கலையை அறிந்திருந்த நெசவாளரை மன்னரின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கைக்கு அழைத்து வந்தார். அதற்காக மன்னனிடம் அன்பளிப்புக்களைப் பெற்றதோடு செப்புப் பட்டயம் ஒன்றையும் வழங்கினார். (இலங்கை முஸ்லிம்களின் வரலாறும் கலாசாரமும் - M.A.M.அமீன்)

3. போர்த்துக்கேயரின் வருகைக்குப் பின்
1518ல் போர்த்துக்கேயர் கொழும்பில் கோட்டை கட்டிய போது முஸ்லிம்கள் எதிர்த்தனர். கள்ளிக்கோட்டை சமோரினது கடற்படை உதவியோடு நெருக்கடி கொடுத்தனர். இதனால் 1524ல் பொர்த்துக்கேயர் கோட்டையை இடித்துச் சென்றனர்.

புவனேகபாகு - போர்த்துக்கேயர் கூட்டை முறியடிக்க கள்ளிக்கோட்டை சமோரினிடம் உதவி கேட்க சில துறைமுகங்களைக் கொடுத்து படையுதவி வழங்கப்பட்டது. கொச்சியிலிருந்து பச்சிமரைக்கார், குஞ்சலி மரைக்கார், அலி இப்றாஹீம் போன்றோர் தலைமையில் கடற்படை அனுப்பப்பட்டது.

கேரளாவில் பொன்னானி எனும் பிரதேசத்தில் வணிகப் பெருங்குடியில் தோன்றிய குஞ்சலிமரைக்கார் சகோதரர்கள் சாமுத்திரி மன்னனிடம் கடற்தளபதிகளாகப் பணிபுரிந்தனர். 1ம் குஞ்சலி மரைக்கார் போர்த்துக்கேயரின் தோல்வியிலிருந்து விடுதலை பெறுவதற்காக மன்னன் மானவிக்ரமன் அவரிடம் வேண்டிக்கொண்டதற்கிணங்க, 1528ல் பர்கூர் எனுமிடத்தில் போரிட்டு வெற்றி
பெற்றார்.

போர்த்துக்கேயர் 1538ல் மீண்டும் போரிட்டபோது கோவாவிலிருந்து (போர்த்துக்கேயர்) வந்தவர்களை கொழும்பில் சந்தித்தார். அவ்வேளை குண்டு பாய்ந்து ஷஹீதானார்.

3ம் குஞ்சலி மரைக்காரை போர்த்துக்கேயர் கோவாவில் சிறையிட்டனர். கிறிஸ்தவராக மாறினால் அல்லது போர்த்துக்கேயருக்கெதிராக புரட்சி செய்வதில்லை என்றால் உயிர்ப்பிச்சை அளிப்பதாக அவரிடம் தூதனுப்பினர். நான் வீரனாகச் சாக விரும்புகிறேன். தயவு செய்து என்னைக் கோழையாக்க முயலாதீர்கள் என விடையளித்தார். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. (இந்திய விடுதலைப் போரில் இஸ்லாமியர் பங்கு - யு.சேக் தாவூத்)

17ம் நூற்றாண்டில் தென்னிந்திய துறைமுகங்களுக்கும் இலங்கைக்குமிடயில் கணிசமான வணிகத் தொடர்புகள் காணப்பட்டன.

1626ல் போர்த்துக்கேயர் தமது பிரதேசங்களிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றிய போது சிலர் இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல சிலர் கண்டி இராச்சியத்துக்குச் சென்றனர்.

போர்த்துக்கேயர் காலத்திலும் வருடந்தோறும் சுமார் 500-600 பேர் வரை தென்னிந்தியாவில் குடியேறியதாக கெய்ரோஸ் குறிப்பிடுகிறார்.

தென்னிந்திய - இலங்கை முஸ்லிம் தொடர்பின் விளைவுகள்

மஃபரில் காணப்பட்ட முஸ்லிம் குடியேற்றங்களில் அரேபிய - இந்திய (சுதேசிகள்) மக்களிடம் வித்தியாசமான சமூக கலாசாரத் தனித்துவம் காணப்பட்டது. இவர்கள் இலங்கையில் குடியேறியபோது அதுவரை நம் நாட்டிலிருந்த அரபு-இஸ்லாமியத் தன்மை இழக்கப்பட்டு இந்தோ - அரேபியத் தன்மையைப் ( South Indianized Islam ) பெற்றது.

இலங்கை முஸ்லிம் குடியேற்றங்களில் தென்னிந்திய முஸ்லிம் சமூகத்திலிருந்து வந்து குடியேறியவர்கள் கணிசமான அளவில் இருந்தனர். அவர்கள் இங்கு தென்னிந்திய முஸ்லிம் வணிகர்களிடையே அரபு வணிகர்களிடம் செல்வாக்குப் பெற்றவர்களும் இருந்தனர்.ஆட்சியாளர்களின் தேவைகளை வழங்கவும், நாட்டின் உற்பத்திப் பொருட்களுக்கு நல்ல சந்தை விலைகளைப் பெற்றுக் கொடுக்கவும் அவர்கள் பலம் பெற்றிருந்தனர். இதனால் அவர்களது அரச அதிகாரத்தைப் பயன்படுத்த முயற்சிக்கவில்லை. இதனால் தன்னைத் தானே பரிபாலித்து சொந்தச் சட்டங்களையும் மரபுகளையும் பேணிக்கொள்ள வாய்ப்புக் கிடைத்தது. இந்நடைமுறையை இலங்கை முஸ்லிம் சமூகம் சற்றுத் தளர்ந்த நிலையில் பின்பற்றியது. (இலங்கை முஸ்லிம்கள் - சுக்ரி)

இந்த லெப்பைமார் பெரும்பாலும் தென்னிந்தியாவிலிருந்து வந்த தகுதியற்ற சனங்கள். இவர்களுக்கு குர்ஆன் ஓதிக்கொடுக்க மட்டுமே தெரியுமல்லாமல் வேறு கல்விகளைப் புகட்டத் தெரியாது. அரபுப் பாஷையைப் படித்துக் கொடுப்பதற்கு இந்த லெப்பைமார் நேர்மையுள்ளவர்களல்லர். இந்த லெப்பைமார் திருத்தத்தின் வாடை வீசப்பெறாதவர்களாகவும் திருத்தம் ஏதென்று அறியாதவர்க்ளாகவும் இருப்பதால் இவர்களுக்குக் கீழ் ஓதுகிற எமது பிள்ளைகள் திருந்த மாட்டார்கள். (.எல்.எம்.அப்துல் அஸீஸ்)

அரபு வணிகர்களின் வழிவந்த கலப்பு இனத்தவரை இந்தியாவின் மேற்குக் கரையில் (மலபார்) மாப்பிள்ளை என்றும் கிழக்குக்கரையில் (மஃபர்) லெப்பை என்றும் அழைப்பதாக காயல் ஹாபிஸ் எம். கே.செய்யித் அஹ்மத் முஸ்லிம் தமிழ்ப் பாரம்பரியம் எனும் நூலில் குறிப்பிடுகிறார். இலங்கையில் குடியேறிய பரம்பரையினரே லெப்பை எனப்படுவர்.

கொழும்பில் மரைக்கார் குழு, லெப்பைக் குழு என இரு குழுவினர் இருந்தனர். (முஸ்லிம் நேசன் 26/04/1885)

இலங்கை முஸ்லிம்களுக்கும் தென்னிந்திய முஸ்லிம்களுக்குமிடையிலான வணிக, கலாசார, பண்பாட்டுத் தொடர்பின் மூலம் இலங்கை முஸ்லிம்களுக்கு மத்தியில் அறபுத் தமிழ் பரவி இலங்கை முஸ்லிம்களையும் இந்திய முஸ்லிம்களையும் இணைக்கும் கலாசார பாலமாக விளங்கியது.தென்னிந்திய முஸ்லிம் அறிஞர்களின் நூல்கள் இலங்கை முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரபல்யமடைந்தன.
உதாரணம்:
1. மாப்பிள்ளை லெப்பை ஆலிமின் மகானி, பத்ஹுத்தய்யான், இப்னு நபாதாவின் குத்பா மொழி பெயர்ப்பு தலைப்பாத்திஹா;
2. பேருவலை ஷெய்கு முஸ்தஃபா: பத்ஹுர்-ரஹ்மான் பி தர்ஜமதி தஃப்ஸீரில் குரான், மீஸான் மாலை
3. கஸாவத்தை ஆலிம் அப்பா: கஸீததுல் முரப்பஹா, கஸீததுல் மகிய்யா, கஸீததுல் மதனிய்யா
4. ஸல்தீன் என்பவர் மலாய் மொழியில் மட்டுமன்றி அரபு மொழியிலும் அக்காலப் பிரிவில் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் வழக்கிலிருந்த அரபுத் தமிழிலும் புலமை பெற்றிருந்தார். முஹ்யித்தீன் முனாஜாத் எனும் அரபுத் தமிழ் நூலை மலாய் மொழியில் பெயர்த்தார். 1900 முதல் உண்மை எனும் பெயரில் அரபுத் தமிழ் பத்திரிகை ஒன்றையும் வெளியிட்டார்.

காதிரிய்யா, ஷாதுலிய்யா, ரிஃபாய்ய்யா, நக்ஷபந்திய்யா முதலாம் தரீக்காக்கள் தென்னிந்திய முஸ்லிம்களோடு ஏற்பட்டௌறவின் பயனாகவே நம் நட்டில் அறிமுகம் பெற்றன. மௌலூத், கந்தூரி, கத்தம், பாத்திஹா, ராத்தீபு.சந்தனக்கூடு, சாமத்திய / ஸுன்னத் சடங்கு, தாலி, ரொக்கம், சீதனம், மை வெளிச்சம், பால் (முகூர்த்தம்) பார்த்தல் முதலாம் விடயங்கள் நம் நாட்டு முஸ்லிம்களின் வாழ்வியல் அம்சங்களோடு ஒன்றறக் கலந்தன.

பிற்காலத்தில் தப்லீக், ஜமாஅதே இஸ்லாமி போன்ற இஸ்லாமிய இயக்கங்கள் தோற்றம் பெறவும், தௌஹீத் இயக்கப் பிரசாரகர்கள் இங்கு வருகை தரவும் இவ்வுறவு காரணமாக அமைந்தது. இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் தாக்கம் காரணமாக இங்கு இலங்கை முஸ்லிம் லீக் தோற்றம் பெற்றது. இலங்கைக்கு வந்த இந்திய முஸ்லிம்கள் தமது வணிக மையங்களுக்கு அருகில் மஸ்ஜித்களை நிறுவினர். இது காலப்போக்கில் இலங்கையின் வணிக நகர்களிலெல்லாம் மஸ்ஜித்களும் ஸாவியாக்களும் தக்கியாக்களும் தர்ஹாக்களும் தோன்றக் காரணமாக அமைந்தது.

தென்னிந்திய மத்ரஸாக்களில் இலங்கை மாணவர்கள் கற்றனர். (பாக்கவி, நூரி, ஜமாலி) இலங்கையில் மத்ரஸாக்கள் ஆரம்பிக்கப்பட்டன. அவற்றில் தென்னிந்திய முடர்ரிஸ்கள் கற்பித்தனர். தென்னிந்திய மத்ரஸாத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இஸ்லாமிய தமிழிலக்கியம் ஆரம்பமானது.

மேலதிக வாசிப்புக்கு:
1. இலங்கை முஸ்லிம்கள், தொன்மைக்கான வரலாற்றுப் பாதை (எம்..எம்.சுக்ரி)
2. இலங்கை முஸ்லிம்களின் வரலாறும் கலாசாரமும் (எம்..எம்.அமீன்)
3. பர்பரீன் (எம்.சீ.எம்.ஸாஹிர்)
4. கலாநிதி டி.பி.ஜாயா (எஸ்.எம்.கமால்தீன்)
5. இலங்கைச் சோனகர் இன வரலாறு (.எல்.எம்..அஸீஸ்)
6. ஸர் ராசிக் பரீட் - வழியும் நடையும் (ஸயீத் எம்.இர்ஷாட்)
*13ம் தர மாணவர்களுக்கான புதிய பாடத்திட்ட அறிமுகக் கருத்தரங்கில் எம்.எச்.எம்.நாளிர் (B.A.) அவர்கள் தொகுத்து வழங்கிய அடிக்குறிப்பிலிருந்து

இவ்வுறவினால் விளைந்த சாதகங்கள்
1. முஸ்லிம்கள் தமது கலாசாரத்தைத் தொடர்ந்தும் பாதுகாப்பதற்கான ஒரு வழியாக அமைந்தமை
2. தமிழ் மொழியிலும் அரபுத் தமிழிலும் இஸ்லாமிய இலக்கியங்கள் கிடைத்தன.
Eg: * தப்ஸீர்கள் (மகானீ - மாப்பிள்ளை லெப்பை ஆலிம் )
* ஹதீஸ் நூல்கள்
* பிக்ஹ் நூல்கள்
* ஒழுக்கரீதியான நூல்கள் (அதபு மாலை, பெண் புத்தி மாலை, தலைப்பாத்திஹா)
3. அரபு மொழியிலான சமய நூல்கள் பெற வழி கிடைத்தமை
4. இந்திய மத்ரஸாக்களில் சேர்ந்து மார்க்கக் கல்வி கற்கச் சந்தர்ப்பம் கிடைத்தமை
5. சமயச் சடங்குகளுக்குத் தலைமை தலைமை தாங்க உள்ளூரில் ஆலிம்கள் கிடைக்காதபோது தென்னிந்தியாவிலிருந்து ஆலிம்களை வரவழைத்துச் செய்து கொள்ள வாய்ப்புக் கிடத்தமை
6. இந்திய வியாபாரிகள் / ஆலிம்கள் மஸ்ஜித்களையும் மத்ரஸாக்களையும் நிர்மாணித்தமை ( வெலிகம பாரி, காலி இப்ராஹீமிய்யா, புத்தளம் காஸிமிய்யா, தக்கியாக்கள், ஸாவியாக்கள் )
7. தமிழ் நூல்களை இந்தியாவில் பிரசுரிக்க வாய்ப்புக் கிடைத்தமையும் அவற்றை இறக்குமதி செய்ய இலகுவாய் அமைந்தமையும்
8.வியாபார, அரசியல் தொடர்பும் விளைவாக உள் நாட்டுச் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் பிறந்தமையும் ( முஸ்லிம் லீக் என்ற பெயர் )
9. கிலாபத் மற்றும் கல்வி மறுமலர்ச்சி தொடர்பான சிந்தனைக்கு வித்திட்டமை (Sir, ஸெய்யித் அஹ்மத் கான் (அலிகார் ) போன்ற இந்திய அறிஞர்களது சீர்திருத்த முயற்சிகளின் தாக்கம் சித்தி லெப்பை போன்ற அறிஞர்களிலும் உணரப்பட்டமை, ஸாஹிராக் கலூரியின் தோற்றத்தில் அலிகாரின் பங்கு )
10. இலங்கையில் சீர்திருத்த இயக்கங்களின் அறிமுகத்துக்கு வழி செய்தமை. (கேரளாவைச் சேர்ந்த பீடித் தொழிலாளர்கள் மூலம் அவர்கள் குடியிருந்த கொழும்பு டாம் வீதியில் ஜமாஅதே இஸ்லாமி அறிமுகமாகியது.

தென்னிந்திய உறவினால் ஏற்பட்ட பாதகங்கள்

1. அரபு மொழியின் முக்கியத்துவம் குறைந்தமை.
2. அரேபியருடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டமை.
3. இஸ்லாம் என்ற பெயரில் தென்னிந்தியமயமாக்கப்பட்ட இஸ்லாமும் இலக்கியங்களும் நம் நாட்டு முஸ்லிம்களுக்குக் கிடைத்தமை. Eg: கிஸ்ஸாக்கள் - தப்ஸீர் உரூஹுல் பயான், மஸாலாக்கள் - நூரு மஸாலா, முனாஜாத்துகள் - இரகசியமாக உரையாடுதல் / இறைவன் மீது புகழ் பாக்கள் பாடி இறைஞ்சுதல், பிள்ளைத் தமிழ்.
4. பிரதேச வாரியாக இஸ்லாமிய சிந்தனை கிடைத்தமையும் தென்னிந்திய கலாசாரத்தைத் தழுவிய சிந்தனைகள் அறிமுகமானமையும். (குறிப்பிட்ட சில சமய நூல்கள், குறித்த சில ஆசிரியர்களின், மத்ரஸாக்களின் கருத்துக்கள் மட்டும் இஸ்லாமாகக் கருதப்பட்டமை. Eg: சித்திலெப்பையினதும் மாப்பிள்ளை லெப்பையினதும் இரு வேறுபட்ட வழிமுறைகளைக் கொண்ட சிந்தனைகள்.
5. இந்தியாவில் இருந்து ஆலிம்கள் வந்ததால் இலங்கையில் இருந்து கற்கச் செல்லத் தேவை இல்லாது போனமையும், தரக்குறைவான ஆலிம்களால் இஸ்லாம் ச்ரிவர விள்க்கப்ப்டாமையும். இக்காலப் பிரிவில் இலங்கையில் இஸ்லாத்தைக் கற்பிக்க ஆலிம்கள் தேவையென பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்பட்டது. தொப்பி அணிகின்ற முஸ்லிமாகவும் முறையாக கோழி அறுக்கத் தெரிந்திருத்தல் வேண்டும் போன்ற அம்சங்களே அந்த ஆலிம்களுக்கான தகைமைகளாகக் கருதப்பட்டன. இவர்கள் தமது வயிற்றுப் பிழைப்புக்காகத் தென்னிந்திய இந்துக்களிடம் காணப்பட்ட கலாசார அம்சங்களுக்கு இணையான விடயங்களை நம் நாட்டு முஸ்லிம்களிடையே அறிமுகப்படுத்தினர். Eg: கந்தூரி, கத்தம் (திதி/திவசம்), பாதிஹா (தலைப் பாதிஹா, பாம்புப் பாதிஹா), மௌலிது, ராதிப், நார்ஷா, சுன்னத்து, சாமத்தியச் சடங்குகள், 40ம் நாளில் பிள்ளைக்குப் பெயர் சூட்டு விழா.
6. சமய, திருமண சடங்குகளில் தென்னிந்திய கலாசாரம் ஊடுருவியமை. (ரொக்கம், சீதனம், தாலி, நாள் நேரம் பார்த்தல், இசை நிகழ்வுகள்)
7. மஸ்ஜித், மத்ரஸாக்களில் தென்னிந்தியரின் ஆதிக்கம் ஏற்பட்டமை.
8. தென்னிந்திய தமிழ், அரபுத் தமிழ் இலக்கியங்கள் திணிக்கப்பட்டமை.
9. தவறான, அகீதாவுக்கு முரணான அத்வைத சிந்தனைகளோடு கூடிய வழிகெட்ட ஸூபித்துவ ஒழுங்குகளுக்கான அமைப்புக்கள் தரீகாக்கள் என்ற பெயரில் தோற்றம் பெற்றமை.
,இவ்வாறான தவறான சிந்தனைகளைத் தவிர்த்து மேற்கொள்ளப்படும் தரீகா நடவடிக்கைகள் இஸ்லாமிய நடைமுறைகளுக்கு என்றும் முரணாக அமைவதில்லை.
10. இலங்கை முஸ்லிம்களின் வளங்கள் சுரண்டப்பட்டமை. (இஸ்லாத்தின் பெயரால் தவறான சடங்கு சம்பிரதாயங்கள், பிரச்சாரங்கள் மூலம்)