Monday 28 November 2011

சிறுபான்மையினரின் உரிமைகள் -பாகம் -1

Abdur Rasheethu

இலங்கைச் சிறுபான்மையினரின் உரிமைகள் தொடர்பாக அறிவதற்கு முன்னர் சிறுபான்மையினர் தொடர்பான அடிப்டை விடயங்களை அறிதல் மிக முக்கியமாகும், உலக சனத் தொகைப் பரம்பலில் சமனற்று கானப்படுவது போன்ற அமைப்பே நாடுகளின் சனத்தொகை அமைப்பிலும் பல்வேறு பட்ட வித்தியாசங்கள் கானப்படுகின்றன.இவ்வித்தாசங்கள் அங்கு வாழும் மக்களின்  அளவு ரீதியானதும்,பண்பாட்டு ரீதியிலும்,வெவ்வேறு பௌதீக காரணிகளின் அடிப்படையிலும் அமையலாம். இவற்றில் ஏதாவது ஒரு அளவு கோலின் அடிப்படையில் மக்கள் வகைப்படுத்தப்பட்டு இருப்பதனையும் அவதானிக்க முடியும். அதன் அடிப்படையில் சிறுபான்மையினர்,பொரும்பான்மையினர் போன்ற சொற்றொடர்கள் அவ்வக்குழுமத்தினை  வகைப்படுத்தியிருப்பதை அவதானிக்க முடிகின்றது. இச் சிறுபான்மை,பெரும்பான்மை நிலமைகள் மதம்,மொழி,நிறம்,இனம்,அரசியல் மற்றும் கொள்கை அடிப்படையிலும் அமையலாம்.
ஒரு நாட்டில் குறித்த மொழியைப் பேசுவோரின் தொகை ஒப்பீட்டளவில் மற்றுமொரு மொழியைப் பேசுவோரின் என்னிக்கையில் ஒப்பீட்டளவில் குறைவாக கானப்பட்டால் அவர்கள் மொழிவாரியான சிறுபான்மையினர் எனப்படுவர்.
பல்லினத்தன்மையும்,பல் கலாச்சாரமும் கொண்ட ஒரு  நாட்டில் பொதுவாக ஒரு பெரும்பான்மைசிறுபான்மை என்ற பேதங்கள் நிலவுவதை சாதாரணமாக அவதானிக்கலாம். சிறுபான்மை என்ற வகைப்பாட்டிற்குள் ஒன்றுக்கு மேற்பட்ட மக்கள் குழுமங்கள் ஏதாவது ஒரு அடிப்படையில் அமையவும் முடியும். இத்தகைய நிலமைகள் காணப்படும் நாடுகளில் உரிமைப்போராட்டங்கள்,பிரிவினைவாதம்,சுயநிர்ணயத்திற்கான போராட்டங்கள் என்பன இடம் பெறுவதை தவிர்க்க முடியாது.ஒவ்வொரு சமூகமும்; தன்னைப் பாதுகாத்துக்ககொள்ள முற்படும் போது அசாதாரன நிலைமைகள் ஏற்படுவது இயற்கையாகும். அந்த அடிப்படையிலேயே இவைகள் நோக்கபடல் வேண்டும்
சிறுபான்மையினரின் விடயங்கள் தொடர்பாக சர்வதேச தாபனங்களின் ஏற்பாடுகள்
தேசிய அல்லது இன,மத,மொழிச் சிறுபான்மைப் பிரிவினருக்குரிய மக்கள் உரிமைகள் தொடர்பான பிரகடனம்:
இதன் முக்கிய அம்சங்கள்
      1992 ஆம் ஆண்டு ஐ நா பொதுச்சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதுääசிறுபான்மையினர் உரிமைகள் தொடர்பாக கவனம் செலுத்தும் முதலாவது சர்வதேச மனித உரிமைகள் சாசனம். உலகலாவிய ரீதியில் எல்லாச் சூழ் நிலைகளிலும் பிரயோகிப்பதற்கான  நோக்கத்தை கொண்டது.  இது சர்வதேச ரீதியிலான குறைந்த பட்ச தராதரம் மட்டுமே அத்துடன் அரசாங்கங்கள் இதனைவிட சிறப்பான முறையில் செயற்பட வேண்டும் என எதிர்பார்கப்படுகின்றது.சிறுபான்மையினரின் உரிமைகளையும் சட்டத்தின் அடிப்படையிலான ஜனநாயக கட்டுக் கோப்பிற்குள் முழுச் சமுதாயமும் அபிவிருத்தி பொறுவதையும் இது தொடர்புபடுத்துகின்றது. இப்பிரகடனம் பின்வரும் உரிமைகளை சிறுபான்மை மக்களுக்குவழங்குகின்றது. 


தேசிய,இன,மத மொழிச் சிறுபான்மைக் குழுக்களில் உள்ளடங்கியவர்களின் உரிமை குறித்த பிரகடணம் (ஐநா பொதுச்சபை : தீர்மானம் 4-135 – 1992 டிசம்பா 18 )
உறுப்புரை -1
அ.அரசுகள் தங்களின் எல்லைக்குற்பட்ட பகுதியில் உள்ள தேசிய இனääமத மற்றும மொழிச் சிறுபான்மையினரின் இருத்தலையும் தனித்தன்மையையும் பாதுகாக்கும்.இத்தகைய தனித்தன்மைகள் வளர்வதற்கான சூழலையும் உற்சாகப்படுத்தும்.
ஆ.இத்தகைய இலக்கை அடைவதற்கு பொருத்தமான சட்ட மற்றும் ஏனைய நடவெடிக்கைகளை மேற் கொள்ளும்.
சிறுபான்மை மக்களின் வாழ்க்கைக்கும் அவர்களின் தேசிய இன கலாச்சார மத மொழி தனித்துவத்திற்கும் பாதுகாப்பு அளிப்பது அரசாங்கங்களின் கடமை என வலியுருத்தும் இந்த ஏற்பாடு கூட்டுப்பாதுகாப்பினை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.சிறுபான்மையினரின் வாழ்கை என்பது அவர்களின் உடற்பாதுகாப்பு வாழும் பிரதேவசங்களில் தொடர்ந்து தங்கியிருக்கும் உரிமை அப்பிரதேசங்களில் தொடர்ந்து தங்கியிருப்பதற்கு தேவையான பொருட்கள் வளங்களைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு முதலிய அனைத்தையும் உள்ளக்குவதாக அமைகின்றது.
இவ்வுறுப்புரையின் பிரதான அம்சங்களாக கருதப்படுபவை
சிறுபான்மையினரின் தனித்துவ இயல்புகளைப் பாதுகாத்து ஊக்குவித்தல் சிறுபான்மை மக்களின் உரிமைகள் தொடர்பான அதிமுக்கமான கோட்பாடாகும்.
இன ஓழிப்பிலிருந்து பாதுகாப்புப் பெறும் உரிமை,உயிர் வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளை பெறும் உரிமை.
பாரபட்சம் காட்டப்படாமை,ஒதிக்கி வைக்கப்படாமை,ஆட்கொள்ளப்படாமை அத்துடன் பல்வகை கலாச்சாரத்தின் அபிவிருத்திக்கு ஊக்கமளித்தல்,இக்குறிக்கோள்களை எய்துவதற்கு அரசாங்கத்தினால் உரிய நடவெடிக்கைகள் எடுக்கப்படுதல் வேண்டும்.
இன ஒழிப்புக் குற்றத்தை தடுப்பதற்கும் தண்டிப்பதற்கான ஒப்பந்தம் குடியுரிமைகள் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் 27 ஆவது உறுப்புரை என்பனவும் உயிர்வாழவதற்கான உரிமை பற்றி எடுத்துக் கூறுகின்றன.
சிறுபான்மையினரின் வாழ்க்கை உரிமையை பாதுகாத்தல் என்பது அவர்களின் உடல்ரீதியிலான பாதுகாப்புடன் மட்டும் அமைந்து விடுவதில்லை.அது அவர்களின் குழுத்தனிததுவத்தை பேனுவதற்கு அவசியமான மத,கலாச்சார,மொழிப்பாரம் பரியங்களின் பாதுகாப்பையும் உள்ளடக்குகின்றது.அந்த தனித்துவம் பேணிப்பாதுகாக்கப்படும் சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டுமாயின் சிறுபான்மையினர் கலாச்சார அபிவிருத்திக்கு தடையாக இருக்கும் சட்டங்கள் அகற்றப்பட வேண்டும்.அவர்களின் கலாச்சார வளர்ச்சிக்கு தடையாகாத  அவசியமான நிறுவணங்கள் உற்பட எல்லா வசதிகளும் செய்து கொடுக்கப்படல் வேண்டும்.அரசின் சகல துறைகளிலும் சிறுபான்மையினரின் பங்களிப்பும் அவர்களின் தனித்துவ இயல்புகளுக்கும் மதிப்பளிக்கப்பட வேண்டும்.அத்தகைய சூழ்நிலையை மேலும் முன்னேற்றுவதற்கு அரசாங்கத்தினால் மூலவளங்கள் வழங்கப்படும் சாத்தியமும் நிலவ வேண்டும்.
சிறுபான்மையினரின் குழுத்தனித்துவத்தைப் பேணுவதற்கு அவசியமான நிலமைகளை அரசாங்கங்கள் பாதுகாத்து ஊக்குவிக்க வேன்டுமென உறுப்புரை 1 (ஆ)பகுதி வலியுறுத்துகின்றது.இவ்வுறுப்புரையை சரியான முறையில் அமுல்செய்வதற்கு சட்டங்களும் ஏனைய நடவெடிக்கைகளும் அவசியம்.ஏனைய நடவெடிக்கைகள் என்பதில் நீதிபரிபாலனää நிர்வாகää பிரச்சார மற்றும் அறிவூட்டல் நடவெடிக்கைகளும் அடங்கும்.பொருத்தமான நடவெடிக்கைகள் எவையென அடையாளம் காண சிறுபான்மையினருடன் ஆலோசனை நடாத்துவது முக்கிமானதாகும். இத்தகைய நடவெடிக்கைகளில் பெரும்பாலனவை பற்றிய விபரங்கள் பிரகடனத்தின் 2ஆம்ää4ஆம் போன்ற பல்வேறு உறுப்புரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. அனைத்துவிதமான இன ஒதுக்கல்களையும் ஒழிக்கும் சர்வதேச உடன்படிக்கை(4ஆம் உறுப்புரை ) குடியுரிமை மற்றம் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை (20 ஆம் உறுப்புரை),  போன்ற வேறு சர்வதேச மனித உரிமை ஒப்பந்தச்சாதனங்களிலிருந்தும் இத்தகைய நடவெடிக்கைககள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
உறுப்புரை – 2
அ.தேசிய,இன,மத மற்றும் மொழிச்சிறுபான்மையினர் சுதந்திரமாக எவ்வித குறுக்கீடும், ஒரு தலைப் பட்ச மான பார்வையும் இல்லாமல் தனிப்பட்ட மற்றும் பொதுவான வாழ்க்கையில் தங்களின் சொந்த கலாச்சாரத்தை அனுபவிப்பதற்கும்,தங்களின் மதத்தைப் போதிப்பதற்கும்,அதனைக் கடைப்பிடிப்பதற்கும் தங்களின் மொழியைப் பயன்படுத்துவதற்கும் உரிமை படைத்தவர்கள்.
ஆ.கலாச்சார,மத,சமூக ,பொருளாதார மற்றும் பொதுவாழ்க்கையில் செயலூக்கத்தோடு பங்குபற்று வதற்குச் சிறுபான்மையினர்கள் உரிமை படைத்தவர்கள்.
இ.தேசிய சட்டமியற்றல்லுக்கு முரண்பாடிலில்லாத வகையில் தாங்கள் சார்ந்துள்ள சிறுபான்மையினம் அல்லது தாங்கள் வசிக்கும் பிராந்தயம் தொடர்பான முடிவுகளிற் தேசிய அளவிலும் பொருத்தமான இடங்களில் பிராந்திய மட்டத்திலும் செலூக்கத்தோடு பங்கு பெறுவதற்குச் சிறுபான்மையினருக்கு உரிமை உண்டு.
ஈ.தங்களின் சொந்த அமைப்புக்களை நிறுவுவதற்கும்,தொடர்ந்து நடத்துவதற்கும் சிறுபான்மையினருக்கு உரிமையுண்டு.
உ.எவ்வித ஒருதலைபட்சமான அணுகுமுறையும் இனறிச்சுதந்திரமாகவும் அமைதியான முறையிலும் தங்கள் குழுக்களில் உள்ள உறுப்பினர்களோடும்,மற்றய சிறுபான்மை இனத்தவரோடும் ஒரு நாட்டின் எல்லைகளுக்கு அப்பால் மற்ற நாட்டில் வசிக்கும் தங்களின் இன அல்லது மரபுவழி அல்லது மத அல்லது மொழியோடு தொடர்புடைய குடிமக்களோடு தொடர்பு கொள்ளவும் சிறுபான்மையினருக்கு உரிமையுண்டு.
இவ்வுறுப்புரையின் பிரதான அம்சங்களாக :
பிரகடனத்திலுள்ள கோட்பாடுகள் மதிப்பளிக்கப்படுவதை உறுதிப்படுத்த அரசாங்களிகால் மேற்கொள்ள வேண்டிய நடவெடிக்கைகள் தொடர்பாகவும்,பலதரப்பட்ட துறைகளில் முனைப்பாக சிறுபான்மையினர் பங்கு கொள்ள உள்ள உரிமைகள் ,சங்கங்கள் அமைத்து ஒன்று ஒன்று கூடும் சுதந்திரம், சிறுபான் மைப்பிரிவுகளுக்கு உள்ளேயும்,சிறுபான்மைப்பிரிவுகளுக்கு இடையிலும் தேசிய எல்லைகளைத் தான்டியும் மேற்கொள்ளப்படும் தொடர்புகள் உட்பட தமது குழுவின் ஏனைய அங்கத்தவர்களுடன் அமைதியான வழியில் தொடர்புகளை ஏற்படுத்தவும் அவற்றைப் பேணவும் கொண்டுள்ள உரிமை யினையும் வெளிக்காட்டுகின்றது.
உறுப்புரை 2(அ)இனை நோக்கும்  போது குடியுரிமைகள்,அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் 27ஆவது உறுப்புரையும் கிட்டத்தட்ட இதே மாதிரியான வாசகத்தையே கொண்டுள்ளது.எனினும்,பிரகடமானது ஆக்கபூர்வமான நடவெடிக்கைகளைக் குறிப்பாக வலியுறுத்துதவனால் ஒரு படி மேலே சென்றுள்ளது எனலாம்.அதாவது,இந்த உரிமைகளைச் சரிவர அமுல்செய்வதற்குப் பாதுகாப்பு நடவெடிக்கைகளை எடுத்தல்,சிறுபான்மையினரின் தனித்துவம் பேணப்படும் சூழ்நிலையை உருவாக்குதல் முதலிய செயற்பாடுகள் அவசியமானவை என்பதைப் பிரகடனம் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.
உறுப்புரை 2(அ)இன் கலாசார,மத,சமூக,பொருளாதார நடவெடிக்கைகளிலும்,பொது வாழ்விலும் பங்குபற்றும் உரிமைகள் பற்றிய கோட்பாட்டை வெளிப்படுத்துகின்றது.வௌ;வேறு குழுக்களை சேர்ந்த மக்கள் தத்தமது கலாச்சாரம்,மொழி ஆகியவற்றின் அடிப்படையில் சமுதாயத்தின் கலாச்சார வாழ்வில் பங்கு கொள்ளவும்,கலைகள் மற்றும் விஞ்ஞானத்தை படைக்கவும் அனுபவிக்கவும்,தமது கலாச்சார சொத்துக்கள் மற்றும் பாரம்பரிங்களை பாதுகாக்கவும் தொடர்பாடலுக்காக தமது சொந்த ஊடகங்களை வைத்திருக்கவும் அரச மற்றும் பொது ஊடகங்களில் சமத்துவ வாய்ப்பினை பெற்றுக் கொள்ளவும் உரிமை கொண்டுள்ளனர்.இன,மத,கலாச்சார அடிப்படையில் சங்கங்கள்,கழகங்கள் மற்றுமின்றி அரசியல் கட்சிகளையும் ஏற்படுத்துவதற்கான உரிமையையும் பங்குபற்றுதல் என்ற கோட்பாட்டினுள் அடங்குகின்றது.பொதுவாழ்வில் முழுமையாகப் பங்குபற்றுதல் என்பதை நடைமுறைப்படுத்தும் போது சில சமயங்களில் விசேட ஏற்பாடுகள் அவசியமாகலாம். பயன் முனைப்பான பங்குபற்றுதலுக்கு வழிகோலக்கூடிய உள்ளுராட்சி,சமஷ்டி ஆட்சி மற்றும் சுயாட்சி முறைகளே அவையாகும்.
உறுப்புரை 2(இ)இன் படி பங்குபற்றுதலை உறுதிப்படுத்தப்பல வழிகள் உள்ளன.சிறுபான்மையினரின் சங்கங்களை பயன்படுத்துதல்ääஏனைய சங்கங்களில் அங்கத்துவம் பெறுதல்,நாட்டிற்குள்ளும் தேசிய எல்லைகளை தான்டியும் சுதந்திரமான முறையில் தொடர்புகளை ஏற்படுத்துதல் என்பன அவற்றுள் சிலவாகும்.
உறுப்புரை 2(ஈ)இன் படி
கல்வி நிலையங்களை ஏற்படுத்தி நெறிப்படுத்த தனிப்பட்டவரர்களும் அமைப்புக்களும் கொண்டுள்ள சுதந்திரத்தை வலியுறுத்தும் பொருளாதார,சமூக,கலாச்சார உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் 13.4 ஆவது உறுப்புரையும் மத அல்லது நம்பிக்கை சுதந்திரம் என்பதில் பொருத்தமான தர்ம ஸ்தாபனங்கள் அல்லது மனித நேய நிறுவனங்களை ஏற்படுத்திப் பராமரிக்கும் சுதந்திரமும் அடங்கும் என்பதனை வலியுருத்தும் மத விரோதம் தொடர்பான ஐக்கிய நாடுகள் பிரகடனத்தின் உறுப்புரையும் இந்த உப உறுப்புரையும் மேலும் விபரமாக விளக்குகின்றன.சிறுபான்மை மக்களின் சங்கங்களை ஏற்படுத்துவதற்கான உரிமை தேசிய மட்டத்தில் மட்டுமின்றிச் சர்வதேச மட்டத்திலும் செல்லுபடியாகும்.

உறுப்புரை 2(உ)இன் படி
இதில் பல பிரிவுகள் கானப்படுகின்றன சிறுபான்மைக்குழு அங்கத்தவர்களுக்கு இடையிலான தொடர்புகள் சிறுபான்மைக்குழுக்களுக்கு இடையிலான இடையிலான தொடர்புகள்,தேச எல்லை கடந்த  தொடர்புகள் என்பன அவற்றுள் அடங்கும்.சிறுபான்மைக் குழு அங்கத்தவர்களுக்கு இடையிலான என்பது சங்கம் அமைக்கும் உரிமையோடு பின்னிப்பினைந்துள்ளது. சிறுபான்மைக்குழுக்களுக்கு இடையிலான தொடர்பு என்பது ஒரு நாட்டின் எல்லைக்குள் பல்வேறு சிறுபான்மைக் குழுக்கள் தமது அனுபவங்கள்,தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும், சிறுபான்மை யினருக்கென ஒரு பொது அரங்கை ஏற்படுதிக்கொள்ளவும் உதவும் ஏற்பாடாகும்.தேச எல்லை கடந்த தொடர்பு என்பது வேறு நாடுகளிலுள்ள சிறுபான்மையினருடன் பிரஜைகளுடனும் சுதந்திரமாகவும் அமைதியான வழியிலும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நிபந்தனை அரசின் பாதுகாப்பு நலன்களுக்கு உத்தரவாதமாக அமைகின்றது.

சிறுபான்மையினர் முனைப்பாக அரசியலில் பங்குபற்றுதல் : சமுதாய அரசியல் அமைப்புக்களில் பயனுள்ள முறையில் பங்குபற்றும் வாய்ப்பு பெரும்பான்மை,சிறுபான்மை ஆகிய இரு பிரிவுகளையும் சேர்ந்த வௌ;வேறு குழுக்களின் அங்கத்தவர்களுக்கு வழங்கப்படுவது அவசியம். இருந்த போதிலும் சிறுபான்மையினர் சம்பந்தப்பட்ட சகல நிலமைகளுக்கும் ஏற்புடையதான ஒழுங்கு முறை கிடையாது. பொது விவகாரங்களில் எவ்வித பாரபட்சமும் இன்றிப் பங்குபற்றும் உரிமையும் வாய்ப்பும் சகல மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதே அடிப்படைத்தேவையாகும். இத் தேவையை நிறைவு செய்வதற்கு அரசாங்கங்களும் சிறுபான்மைக் குழுக்களும் பின்வரும் மாற்று வழிமுறைகளை ஆராய்ந்து தமது சூழ்நிலைக்கு ஏற்ப பொருத்தமான ஏற்பாட்டைச் செய்வதற்கான முயற்சிகளை மேற் கொள்ளலாம்.
1. சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் செய்யும் ஆலோசனை சபைகளும் தீர்மானம் எடுக்கும் அமைப்புகளும் கல்வி,கலாச்சாரம்,மதம் போன்ற துறைகளில் இது முக்கியமானது.
2. தேசிய அல்லது இன,மத,மொழிச்சிறுபான்மை மக்களின் தேர்ந்து எடுக்கப்பட்ட அமைப்புகளும் பேரவைகளும்
3. உள்ளுர் மற்றும் தன்னாட்சி நிர்வாகமும்  பிரதேச அடிப்படையிலான தன்னாட்சியும்,காலத்திற்குகாலம் நடத்தப்படும் சுதந்திரமாக  தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும்  ஆலோசனை,சட்டவாக்க,நிறைவேற்று அமைப்புக்களையும் இது உள்ளடக்கும்.
4. ஒரு சிறுபான்மைப்பிரிவினர் தமது தனிததுவத்தை பேணும் பொருட்டு,தமது மொழியை அல்லது  சமய சடங்குகளை விருத்தி செய்வது போன்ற ஒரு நோக்கத்திற்காக பிரதேச அடிப்படை அல்லாத சுய முறையில் மேற் கொள்ளும் சுய நிர்வாகம் (செயற்பாட்டு ரீதியிலான தன்னாட்சி,கலாச்சார தன்னாட்சி )
5. பண்முகப்படுத்தப்பட்ட அல்லது உள்ளுர் அடிப்படையிலான அரசாங்கம் அல்லது தன்னாட்சி ஏற்பாடு. இது பிரதேச மற்றும் ஜனநாயக அடிப்படையிலானது. காலத்திற்கு காலம் நடத்தப்படும் பாரபட்சமற்ற,சுதந்திரமான தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும். ஆலோசனை சட்டவாக்க,நிறைவேற்று அமைப்புகளையும் இது உள்ளடக்கும்.
6. தேசிய சட்டசபையிலும் ஏனைய தெரிவுசெய்யப்பட்ட அமைப்புகளிலும் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்கான விசேட நடவெடிக்கைகள். சிறுபான்மையினரின் என்னிக்கை மிகக்குறைவாக இருந்தாலும் சாதாரண நிலைமைகளில் பிhதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தல்.விகிதாசார தேர்தல் முறையில் சிறுபான்மையினருக்குகான குறைந்த பட்ச பிரதிநிதித்துவம் குறைக்கப்படலாம்.

-பாகம் இரண்டு தொடரும்.....................

No comments:

Post a Comment